வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (08:02 IST)

இருவரும் தற்கொலை செய்துகொள்ள திட்டம் – காதலியை நூதனமாகக் கொன்ற காதலன் !

கும்பகோணத்தில் தன் காதலியின் நடத்தை மேல் சந்தேகம் அடைந்த காதலன் வாழைப்பழத்தில் விஷம் வைத்து அவரைக் கொலை செய்துள்ளார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த தமிழ் என்ற 20 வயது பெண் ஜவுளி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது.

இந்நிலையில் அய்யப்பனுக்கு தனது காதலி தமிழ், வேறு ஒருவரோடு பழகுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு வேலை முடிந்து செல்லும் போது சேஷ வாடி என்ற இடத்தில் இதுகுறித்து சண்டைபோட, தற்கொலை செய்துகொள்ள இருவரும் முடிவெடுத்துள்ளனர்.

அய்யப்பன் இரு வாழை பழங்களை வாங்கி விஷத்தை கலந்து வைத்திருப்பதாக சொல்லி தமிழை சாப்பிட சொல்லியுள்ளார். பின்னர் தான் சாப்பிடுவதாக சொல்லியுள்ளார். இதை நம்பி தமிழ் வாழைப்பழத்தை சாப்பிட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். ஆனால் அய்யப்பன் தனது வாழைப் பழத்தை சாப்பிடாமல்  அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

விஷம் கலந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட தமிழ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அய்யப்பனைக் கைது செய்துள்ளனர்.