புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (13:33 IST)

ரத்தவெள்ளத்தில் நிர்வாணமாகக் கிடந்த உடல் – புதுச்சேரியில் நடந்த கொடூர மரணம் !

புதுச்சேரியில் தனியாக வாழ்ந்து வந்த தத்துவசாமி எனும் நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள பாலாஜி நகர், மொட்டைத் தோப்பு பகுதியில் தத்துவசாமி எனும் நபர் தனிமையில் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டுக்கு யாரும் அதிகமாக வந்து போவது இல்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 2 மர்மநபர்கள் வந்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு தத்துவசாமிக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரும் கோபத்தில் கத்தியை எடுத்து தத்துவசாமியைக் குத்திவிட்டு தப்பித்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அந்த வீட்டின் காவலாளி வீட்டினுள் சென்று பார்த்த போது தத்துவசாமி வீட்டினுள் நிர்வாணமாகக் கொல்லப்பட்டு கிடந்துள்ளார்.

இதையடுத்துப் போலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட உடலைக் கைப்பற்றிய போலிஸார் குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் தீவிரமாக உள்ளனர்.