திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 27 ஜனவரி 2019 (18:30 IST)

மாமியாரை கொலை செய்து 50 சவரன் நகையை கொள்ளையடித்த மருமகன்!

மாமியாரை கொலை செய்துவிட்டு அவர் வைத்திருந்த ஐம்பது சவரன் நகையை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த மருமகன் நான்கு ஆண்டுகளுக்கு பின் இன்று கைது செய்யப்பட்டார்.
 
புதுவை மாநிலத்தை சேர்ந்த கலைவாணி என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவருடைய மருமகன் ஆறுமுகம் இவரை அடித்து கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த 50 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு தலைமறைவானதாக கூறப்பட்டது. இந்த கொள்ளையுடன் மட்டுமின்றி பல வழிப்பறிகள் மூலம் நகைகளை கொள்ளையடித்து அதில் கிடைத்த பணத்தை வைத்து குதிரை ரேஸ் மற்றும் உல்லாச வாழ்க்கையில் ஆறுமுகம் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது
 
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நகைப்பறிப்பு சம்பவத்தில் ஆறுமுகம் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் மாமியார் கலைவாணி உள்பட பலரிடம் அவர் நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்த ரூ.12 லட்ச ரூபாய் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்த ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.