1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (12:49 IST)

மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்!! வெளியான அதிர்ச்சி காரணம்

சேலத்தில் மருமகள் மாமியாரை கொன்றதற்காக காரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த மாதம்மாள் என்பவரின் மகன் ராமர். இவர் ஒரு பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார்ர். இவரது மனைவி ராஜேஸ்வரி. ராமர் நாமக்கல்லில் உள்ள பேக்கரி கடையின் வேலை செய்து வருவதால் தினமும் அவர் வண்டியில் சென்று வருவார்.
 
இந்நிலையில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் ராமர் உயிரிழந்தார். இதையடுத்து சாலை விபத்தில் சிக்கிய ராமரின் வாரிசுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு தொகை வழங்குவதாக கூறியிருந்தது.
 
மாமியார் மாதம்மாள் உயிரோடு இருந்தாள் தமக்கு இன்ஸுரன்ஸ் தொகை வராது என கருதிய ராஜேஸ்வரி, மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தனது மாமியாரின் விரோதிகளை அழைத்து, இன்ஸுரன்ஸ் தொகையில் ஒரு பகுதியை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி மாமியாரை கொலை செய்ய கரெக்டாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்தார். அதன்படி அவர்கள் மாதம்மாளை கொலை செய்துள்ளனர்.
 
பின்னர் போலீஸார் கொலையாளிகளை பிடித்து விசாரித்ததில் இதன் பின்னணியில் ராஜேஸ்வரி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீஸார் ராஜேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.