வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 அக்டோபர் 2020 (16:03 IST)

கமல்ஹாசனே முதல்வர் வேட்பாளர், என்னென்ன அதிகாரம்: மநீம அறிவிப்பு

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமலஹாசன் ஏற்கனவே ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி சந்திக்க இருக்கும் நிலையில் இன்று காலை மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கமலஹாசன் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்த கூட்டணி முடிவுகளை எடுக்கும் அனைத்து அதிகாரமும் கமல்ஹாசனுக்கு உண்டு என்ற தீர்மானம் இயற்றப்பட்டது
 
ஏற்கனவே அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் திமுகவின் முதல்வர் வேட்பாளர் முக ஸ்டாலின் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் தேர்தல் சூடு பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது