நான் அரசியலுக்கு வந்தது இவரால்தான்: கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வரும் நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தான் அரசியலுக்கு வந்த அதற்கு முழு காரணம் அப்துல் கலாம் தான் என்று அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இன்று அப்துல்கலாம் பிறந்தநாளை நாடே கொண்டாடி வரும் நிலையில் கமல்ஹாசனின் இந்த டுவீட்டை அவரது கட்சி தொண்டர்கள் வைரலாக்கி வருகின்றனர். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.