செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (18:17 IST)

மக்கள் நலனுக்காக என்றும் குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம் - கமல்ஹாசன்

சினிமாவில் சாதித்த நடிகர் கமல்ஹாசன் அரசியலிலும் கால்பதித்துள்ளார். இவரது ரசிகர்கள் அதிகளவில் இவரது கட்சியில் இருந்தாலும்கூட மக்களிடம் மக்கள் நீதி மய்யம் போய்ச் சேர கமல்ஹாசன் முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அரசின் கடமைகளைச் சுட்டிக் காட்ட மக்கள் நீதி மய்யம் என்றுமே தயங்கியதில்லை. கிராம சபைகளைக் கூட்ட வேண்டியதன் அவசியத்தை தமிழ்நாடு அரசிற்கு அறிவுறுத்த சென்னை உயர்நீதி மன்றத்தை மக்கள் நீதி மய்யம் அணுகியுள்ளது. மக்கள் நலனுக்காக என்றும் குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம் என்று பதிவிட்டுள்ளார்.