புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (15:52 IST)

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' – கமல்ஹாசன்

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு காத்திருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான நோபல் விருதில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நோபல் விழாவின் 2020ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக இயற்பியல், வேதியியல், உலக அமைதி, இலக்கியம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றிற்கு நோபல் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் ஏல முறைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்தும், புதிய ஏல அமைப்புகள் உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட பால் மில்க்ரோம் மற்றும் ராபர்ட் வில்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது. நாளை நமதே! என்று தெரிவித்துள்ளார்.