வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (15:37 IST)

பஞ்சாப் மாநில ஐகான்… சோனு சூட்டுக்கு வழங்கப்பட்ட கௌரவத்தை திரும்ப பெற்ற தேர்தல் ஆணையம்!

கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில தேர்தல் ஆணையம் நடிகர் சோனு சூட்டுவை அம்மாநிலத்தின் ஐகானாக அறிவித்தது.

கொரோனா காலத்தில் ஏராளமாக மக்களுக்கு போக்குவரத்து உதவிகளை செய்து கவனத்தை ஈர்த்தார் நடிகர் சோனு சூட். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்து பெரும் அளவிலான உதவிகளை செய்தார். இதனால் அவரை அவர் பிறந்த மாநிலமான பஞ்சாப் மாநில ஐகானாக பஞ்சாப் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்போது அதை திரும்ப பெற்றுள்ளது தேர்தல் ஆணையம். ஜனவரி 4 ஆம் தேதி முதல் அந்த பொறுப்பில் இருந்து அவர் விலக்கிக் கொள்ளப்பட்டதாக பஞ்சாப் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜு தெரிவித்துள்ளார்.