திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 31 மே 2021 (11:54 IST)

இதுதான் உருமாறிய மக்கள் நீதி மய்யமா? - 3 புதிய கொள்கைகள் அறிமுகம்!

கமல் உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை விரைவில் காண்பீர்கள் என தெரிவித்திருந்த நிலையில் கட்சியின் 3 புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் தேர்தலுக்கு பின்னும் சுறுசுறுப்பாக அக்கட்சி இயங்கி வருகிறது என்பதும் குறிப்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் தளத்தில் அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகளும் வேண்டுகோள்களூம் விடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு கட்சியினர் சிலர் வெளியேறிய நிலையில் கமல் உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை விரைவில் காண்பீர்கள் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது மக்கள் நீதி மய்யம் 3 புதிய கொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அவை, மேம்படுத்தப்பட்ட சமூக நீதி, அனைவருக்குமான அரசியல் நீதி, நிலையான பொருளாதார நீதி ஆகும். இதனை கட்சி தொண்டர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.