செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (17:30 IST)

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கர தீ விபத்து!

கும்மிடிப்பூண்டி அருகே பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் இன்று பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 
 
பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் எண்ணெய் கேன்கள், பெயின்ட் தயாரிக்க பயன்படுத்தும் ரசாயனங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் தீ அடங்காமல் கொழுந்து விட்டு எரிகிறது. 
 
சிப்காட் பகுதியில் இருந்து முதலில் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணி நடைபெற்றது. தீ கட்டுக்குள் அடங்காமல் எரிந்து வருவதால் மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. தீயணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.