1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (17:07 IST)

ரயிலில் மின்சாரம் தாக்கிய ரஞ்சித் உடல் நிலையில் முன்னேற்றம் : வெளியான புகைப்படம்

ரயிலில் மின்சாரம் தாக்கிய ரஞ்சித் உடல் நிலையில் முன்னேற்றம் : வெளியான புகைப்படம்
திண்டிவனம் ரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த ரஞ்சித் அவர்களுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, பாமக சார்பில் கடந்த 11ம் தேதி திண்டிவனத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, சிலர் ரயிலின் மீது ஏறி முழக்கங்களை எழுப்பினர். அதில், ரஞ்சித் என்ற வாலிபர் உயர் மின்சாரம் தாக்கி ஒருவர் தூக்கி வீசப்பட்டார். அவர் மின்சார விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
ரயிலில் மின்சாரம் தாக்கிய ரஞ்சித் உடல் நிலையில் முன்னேற்றம் : வெளியான புகைப்படம்