செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (19:06 IST)

மேம்பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

மத்திய பிரதேச மாநிலத்தில் மேம்பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
 
நேற்றிரவு மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 45 பேர் அடங்கிய கும்பள், லாரியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லாரி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப்படுகையில் பாய்ந்தது. 
 
இந்த விபத்தில் 15 பேர் பலியாகியிருந்தனர், மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலினின்றி மேலும் 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.