ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (12:40 IST)

சித்தர் சொன்னார்.. நான் பேசினேன்.. மகா விஷ்ணு வாக்குமூலம்..!

சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது வாக்குமூலத்தில் சித்தர் என்ன சொன்னாரோ, அதை தான் நான் பேசினேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மோட்டிவேஷன் ஸ்பீச் பேசிய நிலையில் அவரது கருத்து சர்ச்சையாக மாறியது. குறிப்பாக அவர் மறு ஜென்மம் குறித்து பேசியதும் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதும் சர்ச்சைக்குரியதாக மாறி உள்ள நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் வாங்கிய நிலையில் அந்த வாக்குமூலத்தில் அவர் சித்தர் சொன்னதால்தான் பேசினேன், சித்தர் என்னிடம்  பேசுவார், அவர்களே என்னை வழிநடத்துவார்கள்.

பள்ளியில் நான் ஏதும் தவறாக பேசவில்லை, எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது, மாணவிகளை நல்வழிப்படுத்தும் விதமாகவே பேசினேன், பல இடங்களில் இதுபோல் பேசியுள்ளேன்’ என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva