அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகா விஷ்ணு தலைமறைவா?
சென்னை அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் மாணவிகள் மத்தியில் மகாவிஷ்ணு உரையாடிய நிலையில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள், மூடநம்பிக்கைகளை பேசியதாக தெரிகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாக ஆவேசமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள், மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் மகாவிஷ்ணு எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு தலைமறைவாகி உள்ளதாகவும் திருப்பூரில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் அவர் இல்லை என்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva