திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (08:45 IST)

இது அன்பு பேருந்தின் கதை…. வெளியானது பிரபு சாலமனின் ‘செம்பி’ டிரைலர்

பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா நடிப்பில் உருவாகியுள்ள செம்பி திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்தன.

இதையடுத்து அவர் இயக்கும் அடுத்த  படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினைக் கதாநாயகனாக்கியுள்ளார். பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டதுதானாம். முழுக்க முழுக்க ஒரு பேருந்தில் நடக்கும் கதை என்று சொல்லப்படுகிறது. தற்போது முழுப் படத்தையும் முடித்துள்ளனர். படத்துக்கு செம்பி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டார்.