வெள்ளத்தில் மிதக்கும் மகாபலிபுரம் கடற்கரை கோவில்!
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வந்தது என்பதும் இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று காலை தாழ்வு கரையை கடந்தது என்பதும் மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாபலிபுரம் பகுதியில் கனமழை பெய்ததால் காரணமாக கடற்கரை கோயில் வெள்ளத்தில் மிதந்து வருகிறது
இதனை அடுத்து அடுத்த சில நாட்களுக்கு மகாபலிபுரம் கோயிலுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இருக்காது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மக்கள் நடமாட்டம் இன்றி மகாபலிபுரம் வெறிச்சோடி காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது