1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 நவம்பர் 2021 (23:58 IST)

சாலை வரை வந்துவிட்டது மெரீனா கடற்கரை: பொதுமக்கள் ஆச்சரியம்

beach water
கடற்கரை சாலையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளிதான் மெரினா கடற்கரையில் இருந்த நிலையில் தற்போது பெய்த கனமழை காரணமாக மெரினா கடற்கரை முழுவதும் தண்ணீராக மாறி கடற்கரை சாலை வரை தண்ணீர் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 2015ஆம் ஆண்டும் அதற்கு முன்னால் சுனாமி வந்த போதும் இதே போல் சாலை வரை தண்ணீர் வந்தது என்பதும் அதன் பின்னர் தற்போதுதான் மீண்டும் மெரினா கடற்கரை முழுவதுமாக தண்ணீர் தேங்கி கடற்கரை சாலை வரை தண்ணீர் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடற்கரை சாலை வரை தண்ணீர் வந்ததை பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள் என்பதும் ஆனால் பொதுமக்களை கடற்கரை பக்கம் இருக்க விடாமல் காவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது