1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 8 நவம்பர் 2021 (19:39 IST)

பழனி முருகன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை ஆன்லைனில் காண ஏற்பாடு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் சூரசம்ஹார  நிகழ்ச்சியை ஆன்லைனில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
பழனி முருகன் கோவிலின் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் சூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெறுகிறது. 
 
இதனை www.palanimurugan.hrce.tn.gov.in என்ற வலைதளம் மூலம் பக்தர்கள் நிகழ்ச்சிகளை ஆன்லைனில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. நவ.9ஆம் தேதி நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்.  நவ.10ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.