திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (13:51 IST)

மதுரையில் சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் தேதி!

chithirai
மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே எட்டாம் தேதி வரை சித்திரை திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மே ஐந்தாம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சித்திரை திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran