திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (13:49 IST)

நுழைவுத் தேர்வெழுத கடல் தாண்டி பயணப்பட வேண்டுமா? சு.வெங்கடேசன்,எம்பி கண்டனம்

venkatesan
நுழைவு தேர்வு எழுதுவதற்கு கடல் தாண்டி பயணம் செய்ய வேண்டுமா என மதுரை எம்பி வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் சேர்வதற்காக நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது இதில் மதுரை மாணவர் ஒருவர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் அவருக்கு நுழைவுத்தேர்வு எழுத லட்சத்தீவில் தேர்வு மையம் என அமைக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் அந்த மாணவர் அதிர்ச்சி அடைந்து தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த மதுரை எம்பி வெங்கடேசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் மதுரை மாணவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர லட்சத்தீவு பயணம் செய்யவேண்டுமா?
 
 நுழைவு தேர்வு எழுத கடல் பயணத்தில் பணம் வேண்டுமா? தேர்வு எழுதுவதை விட கடினம் தேர்வு மையத்தில் சென்று சேர்வது என்ற நிலையை உருவாக்காதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது