செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (16:41 IST)

சென்னையில் இருந்து வந்தவர்கள் உள்ளே வர வேண்டாம்: மதுரை கடையில் ஒரு போர்டு

சென்னையில் இருந்து வந்தவர்கள் உள்ளே வர வேண்டாம்
கொரோனா வைரஸ் சென்னையில் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் சென்னை என்றாலே மற்ற ஊர்க்காரர்கள் நடுங்கும் அளவுக்கு சென்னையில் கொரோனா நிலைமை உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்குள் மதுரை வந்தவர்கள் உள்ளே வரவேண்டும் என மதுரையில் உள்ள ஒரு கடையில் போர்டு வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மதுரை பழங்காநத்தம் புறவழி சாலையில் உள்ள ஒரு கடையில் 'வாடிக்கையாளர் நலன் கருதி, கரோனா பரவலைத் தடுக்க கடந்த மூன்று மாதங்களில் சென்னையிலிருந்து இருந்து வந்த வாடிக்கையாளர்கள் உள்ளே வருவதை தவிர்க்கவும்' என கடையின் நுழைவாயிலில் போர்டு ஒன்று உள்ளது. இது அப்பகுதியில் உள்ள சென்னை வாழ் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் இருந்து சென்னைக்கு வேலை தேடி சென்று நல்ல வேலை, கைநிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை வாழ மட்டும் சென்னை வேண்டும், சென்னையில் ஒரு பிரச்சனை என்றால் மட்டும் சென்னை மக்களை ஒதுக்குவதா? என சென்னை மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.