1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (15:20 IST)

நாளை முதல் சென்னையில் மதியத்திற்கு மேல் கடைகள் அடைப்பா? அதிர்ச்சி தகவல்

நாளை முதல் ஜூன்  30ஆம் தேதி வரை சென்னையில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு கடைகள் அடைப்பு என வணிகர் பேரவை உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை என வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வணிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை இதோ:
 
சென்னை மாநகரில்‌ கொரோனா தொற்று அதிகமாகப்‌ பரவுவதை கவனத்தில்‌ கொண்டு நாட்டின்‌ நலன்‌, மக்கள்‌ நலன்‌, வணிகர்‌ நலன்‌ கருதி, தமிழ்‌ நாடு வணிகர்‌ சங்கங்‌களிந்தலைவர் வெள்ளையன் அவர்கள் அறிவுறுத்தலின்‌படி 16.06.2020 முதல்‌ 30.06.2020 காலை 6.00 மணிமுதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை வியாபாரம்‌ செய்து, மதியம்‌ 2.00 மணிக்கு கடைகள்‌ அடைக்க வேண்டும்‌ என்று மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை ஆக மூன்று மாவட்ட நிர்வாகிகள்‌ சேர்ந்து முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அன்போடு தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
ஏற்கனவே சென்னையில் முழு அடைப்பிற்கு வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது வணிகர் சங்கங்களின் அறிக்கையால் பாதி முழு அடைப்பு உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது