வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (08:45 IST)

பகைக்கு வயது ஒன்று … பலிக்குப் பலி தொடரும் – மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர் !

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் அனுப்பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் நடந்த ஒரு தகராறில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது சம்மந்தமான குற்றவாளிகள் சிறையில் உள்ளனர்.

இது நடந்து ஒரு ஆண்டு முடிந்துள்ள நிலையில் இவரது நண்பர்கள் இப்போது ஒட்டியுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் ‘சிந்திய ரத்தம் வீண்போகாது. எதிரியை வீழ்த்துவது உறுதி. பகைக்கு வயது ஒன்று. பலிக்குப் பலி தொடரும்’ என எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் பகையை வளர்க்கும் பொருட்டு அவர்கள் நடந்து கொண்டுள்ளதாக போலிஸாருக்கு செய்தி வந்துள்ளது.

இதையறிந்து தலைமறைவான கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.