புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (20:17 IST)

மானம் போச்சு ...கத்தியை காட்டி வழிப்பறி செய்த பாஜக பிரமுகர் !

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வழியில் செல்வோரிடம், கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்த பாஜக பிரமுகரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அன்னபார்பட்டியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியை மறிந்த மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, சரவணனிடம் இருந்த 19 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றதாகத் தெரிகிறது.
 
இதையடுத்து உசிலம்பட்டி காவல்நிலையத்தில் சரவணக்குமார் புகார் செய்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீஸார் குற்றவாளியஒத் தேடி வந்தனர்.
 
இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டது  உசிலம்பட்டி நகரத்தலைவர் நல்லமலை என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.