நாங்குநேரி தேர்தலுக்கு தடை வருமா? வேட்பாளரின் மனுதாக்கலால் பரபரப்பு
அக்டோபர் 21ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை அடுத்து இந்த தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், உச்ச கட்ட தேர்தல் பிரச்சாரம் தற்போது நடைபெற்று வருகிறது
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர் பெருமக்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நாங்குநேரி தொகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் இதனையடுத்து இந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்றும் சுயேச்சை வேட்பாளரான சங்கர சுப்பிரமணியன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இந்த தொகுதியில் ஆர்கேநகர் போல் தடை விதிக்கப்படுமா என்று என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்