செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (19:33 IST)

மதுரை காவலர் உயிரிழப்பு: கட்டிட உரிமையாளர் உள்பட 4 பேர் கைது!

மதுரையில் பழமையான கட்டிடம் இடிந்து காவலர் பலியான சம்பவத்தின் அடிப்படையில் இன்று அந்த கட்டடத்தின் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மதுரையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பலியானார். அவருடன் சென்ற மற்றொரு காவலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழந்தது தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர் முகமது இத்ரீஸ், மேலாளர் அப்துல் ரசாக், நாக சங்கர், சுப்பிரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.