செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (19:56 IST)

சென்னையில் ரயில்வே போலி இ-டிக்கெட் விற்ற நபர் கைது!

சென்னையில் ரயில்வே போலி இ-டிக்கெட் விற்ற நபர் கைது!
சென்னையில் ரயில்வே போலி டிக்கெட் விற்ற நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை தண்டையார்பேட்டையில் ரயில்வே விக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அதிரடியாக போலீசார் சோதனை செய்ததில் கள்ளச்சந்தையில் ரயில்வே இ-டிக்கெட்டுகளை விற்பனை செய்த சக்திவேல் என்ற நபர் கைது செய்யப்பட்டார்
 
போலி டிக்கெட்டுக்களை விற்பனை செய்வதற்காகவே அவர் தனியாக அலுவலகம் அமைத்து இருந்தார் என்பதும் அந்த அலுவலகத்தில் போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 
 
மேலும் அவரது அலுவலகத்தில் இருந்து சுமார் 3 லட்சம் மதிப்பிலான போலி டிக்கெட்டுகள் கம்ப்யூட்டர் பிரிண்டர், செல்போன், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது