மதுரை காவலர் பலி: ஓராண்டுக்கு முன்பே நோட்டிஸ் அனுப்பியதாக தகவல்!
மதுரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததால் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று இடிந்து விழுந்த அந்த கட்டிடத்தை ஓராண்டுக்கு முன்பே இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது
மதுரை கீழவெளி வீதியிலுள்ள சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளருக்கு மதுரை மாநகராட்சியின் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே நோட்டீஸ் வழங்கி உள்ளது. இடியும் நிலையில் அந்த கட்டிடம் உள்ளதால் இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக இடிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனால் கட்டிட உரிமையாளர் நோட்டீஸ் கண்டுகொள்ளாமல் இருந்ததால் தான் இன்று விபத்து ஏற்பட்டது என்பதும் பரிதாபமாக காவலர் ஒருவர் பலியாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.