1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (12:53 IST)

4 அல்ல, 14 கேட்கவும் எங்களுக்கு உரிமை உண்டு: பாராளுமன்றத்தில் மதுரை எம்பி ஆவேசம்!

நான்கு அல்ல 14 கேட்பதற்கு கூட எங்களுக்கு உரிமை இருக்கிறது என பாராளுமன்றத்தில் மதுரை எம்பி வெங்கடேசன் காட்டமாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் இன்றைய நிகழ்ச்சியில் மதுரை எம்பி வெங்கடேசன் அவர்கள் பேசியபோது, ‘மதுரைக்கு சர்வதேச விமான நிலையம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் 
 
இந்த நிலையில் ’பல வட மாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே மூன்று சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் போது மதுரைக்கு கேட்பது என்ன நியாயமா? எனவே தர முடியாது என விமான துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்
 
இதனால் ஆவேசமான மதுரை எம்பி வெங்கடேசன் கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் செலுத்திய ஜிஎஸ்டி வரி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய மொத்த வரியை விட அதிகம் என்றும் நாங்கள் 4 அல்ல, 14 கேட்க உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.