தொடர்புடைய செய்திகள்
- சின்னத்தை முடக்க சதி; வாழ்வா சாவா நிலையில் அதிமுக! – அமைச்சர் எச்சரிக்கை!
- மத்திய அரசு கொடுத்த இலவச அரிசியை வித்துட்டாங்க! – அமைச்சர் மீது ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!
- பிரிட்டன் பயணிகளுடன் தொடர்புடையவர்களுக்கும் கொரோனா! – சமூக பரவலாகுமா?
- ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? – சகோதரர் சத்யநாராயணா தகவல்!
- கொரோனா வைரஸ் புதிய திரிபு பிரான்ஸ் நாட்டில் தொற்றியது கண்டுபிடிப்பு
பிரிட்டனில் இருந்து மதுரை வந்தவர்கள் மாயம்! – தேடும் சுகாதாரத்துறை!
பிரிட்டனில் புதிய கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பிரிட்டனிலிருந்து மதுரை வந்த சிலர் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் புதிய வீரியமிக்க கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரிட்டனிலிருந்து மதுரை வந்த 80 பேரில் 76 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீத 4 பேரை தனிமைப்படுத்த அவர்களது முகவரியை அணுகியபோது அவர்கள் தவறான முகவரியை அளித்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் மாயமான 4 பேரை சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
