1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2022 (17:48 IST)

ஆளுனரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் பிரபலங்கள்!

governor
ஆளுநர் அளிக்க உள்ள தேனீர் விருந்தை  சில அரசியல் பிரபலங்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானங்களை நிறுத்திவைத்து மக்களின் உரிமையை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம் என மதுரை எம்பி சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்
 
அதேபோல் ஆளுனரின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பாதித்துள்ள சூழ்நிலையில் அவர் தரும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை முற்றாக நிராகரிக்கிறார் ஆளுநர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது