வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (19:09 IST)

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

Meenakshi
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணத்தை தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
முன்பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் அட்டையின் நகல், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, செல்போன் எண் மற்றும் இமெயில் முகவரி கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் அன்று காலை 8.35 மணி முதல் 8,59 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
திருக்கல்யாணத்தை பார்ப்பதற்கு 200 ரூபாய், 500 ரூபாய் கட்டண டிக்கெட் வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மொத்தம் 12000 பக்தர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 இதற்கான டிக்கெட்டுகளை maduraimeenakshi.hrce.tn.gov.in ,  hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம்
 
Edited by Mahendran