செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (14:09 IST)

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் - கருப்பு உடையுடன் காங்கிரஸ் கட்சி!

மதுரை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டுக்கான அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம் மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் இந்திராணி தாக்கல் செய்தார்.
 
இந்த மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்திற்கு திமுக அதிமுக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஏழு பேர், ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.
 
₹56.21 லட்சம் வருவாய் பற்றாக்குறை என  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வரி வருவாய், மானியம், கடன் மூலம் ₹1751.25 கோடி வருவாய் கிடைக்கும் எனவும், நிர்வாக செலவீனம், பராமரிப்பு, கடனை திரும்ப செலுத்துதல் என ₹1751.82 கோடி செலவீனம் எனவும் மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. 
ஒவ்வொரு ஆண்டு மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தின் போதும் நிதி பற்றாக்குறை மாமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்குவதில் குறைபாடு என மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் தெரிந்தாலும் இந்த முறை பட்ஜெட் அச்சிடப்பட்ட புத்தகமே தட்டுப்பாடு என்ற நிலை ஏற்பட்டது. இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தின் மீதான விவாதம், அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தின் போது தான் தெரியும் மாமன்ற உறுப்பினர்களின் எதிர்பார்ப்பும் எதிர்ப்பும் விவாதமும்.