புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (20:50 IST)

தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்கு உத்திர பெருவிழா நாளை தொடக்கம்!

dhandayuthabani
மதுரை  மாவட்டம் நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உத்திர பெருவிழா நாளை(31-03-23) தொடங்கி வரும்  6 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது

மதுரை  மாவட்டம் நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது.  இந்தக் கோவியில் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர் தொகை பாடி, சுவாமியை வழிபட்டார்.

இதனால், இக்கோவில் சுந்தர் மடம் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று பழனி மலையில் எழுந்தருளிய முருகப்பெருமான்  பின்னர் அங்கே வழிபாடு முடிந்தபின், திரும்ப இக்கோவிலில் எழுந்தருளுவார்.

எனவே இக்கோவிலில் உத்திர பெருவிழா நாளை(31-03-23) தொடங்கி வரும்  6 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

நிறைவு நாளான 6 ஆம் தேதியன்று காலை 10_30 மணிக்கு அன்னதானம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.