1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 19 ஏப்ரல் 2021 (13:07 IST)

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடத்தப்படுமா? மதுரைக் கிளையின் உத்தரவு

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடத்தப்படுமா?
மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடத்துவது குறித்து மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
 
மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், தேரோட்டம் உள்ளிட்ட வைபவங்கள் இந்த ஆண்டு நடைபெறாது என்றும், மீனாட்சி திருக்கல்யாணம் உள்ளிட்ட ஒரு சில வைபவங்கள் நடந்தாலும் அதற்கு பக்தர்களின் அனுமதி கிடையாது என்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் மதுரை கலெக்டர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது என்றும் வேண்டுமானால் கொரோனா பரவல் இருப்பதை காரணமாக மேலும் சில கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தலாம் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் மதுரை பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்