செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 14 ஏப்ரல் 2021 (15:30 IST)

மதுரை பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல்!

மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் எழுந்துள்ளது.

இந்திய அரசியல் அமைப்பை எழுதிய சட்டமேதை பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களின் 130 ஆவது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அவரின் சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு பாஜகவின் றநகர் மாவட்டச் செயலாளர் மகா சுசீந்திரன் தொண்டர்களுடன் வந்த போது அவர்களுக்கு விடுதலை சிறுத்தையினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் எழுந்தது. இதையடுத்து சிலையருகே போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.