மதுரையில் ஊரடங்கு; சிவகங்கையில் குவிந்த மதுப்பிரியர்கள்!

tasmac
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 26 ஜூன் 2020 (13:10 IST)
மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுரைவாசிகள் பலர் மது வாங்க சிவகங்கையில் குவிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதை தொடர்ந்து மதுரையிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் அங்கும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. மாவட்ட எல்லைகள் தடுப்புகள் போடப்பட்டு காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மதுரைக்குள் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மதுரை முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் அருகிலுள்ள சிவகங்கை மாவட்ட எல்லையான புலியூரில் உள்ள டாஸ்மாக் கடையில் குவிய தொடங்கியுள்ளனர். டாஸ்மாக் கடை முன்பு நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் மதுவாங்க காத்திருக்கும் சூழலில் அவர்கள் இ-பாஸ் பெற்று வந்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திடீரென புலியூர் பகுதியில் மதுரையிலிருந்து மதுப்பிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :