வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (14:33 IST)

மீண்டும் கழகத்தில் இணைகிறாரா அஞ்சாநெஞ்சர் அழகிரி! – மதுரையில் போஸ்டர்

மீண்டும் கழகத்தில் இணைகிறாரா அஞ்சாநெஞ்சர் அழகிரி! – மதுரையில் போஸ்டர்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளதற்கு மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்த நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகியுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் மு.க.ஸ்டாலினின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில், அவரின் சகோதரர் மு.க.அழகிரியும் வாழ்த்து தெரிவித்திருந்தார். உட்கட்சி பூசல் காரணமாக கட்சியிலிருந்து விலகி இருந்து வந்த மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அவர் மீண்டும் திமுகவில் இணைய போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரிக்கு நன்றி தெரிவித்து திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.