1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 4 IAS offcers appointed for CM Mk Stalin

முதல்வரின் தனி செயலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள்! – நான்கு பேர் கொண்ட குழு!

Tamilnadu
தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில் அவரது தனி செயலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் மு.க.ஸ்டாலினின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனி செயலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முதல்வரின் தனி செயலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் உதய சந்திரன், உமாநாத், சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
மினிஸ்டர் பதவி இல்லனா என்ன.. மகனுக்கு தனித்துறையே உருவாக்கும் ஸ்டாலின்??