1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:58 IST)

சூப்பர் ஸ்டாரின் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வைரல்....

சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர் நடிகர் மகேஷ்பாபு.

இவரை தெலுங்குசினிமாவின் பிரின்ஸ் என்று செல்லமாக அழைக்கின்றனர் ரசிகர்கள். இவரது ஒவ்வொரு படமும் வசூலை வாரிக்குவிப்பதால் இவர் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

இவர் தற்போது ’’சர்காரு வாரி பாட்டா’என்ற பிரமாண்ட ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் எப்போது ரிலீஸாகும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில்  ‘சர்காரு வாரி பாட்டா’படம் அடுத்தாண்டு(2022) சங்கராந்தி அன்றுதியேட்டரில் ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கான வேலைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் உடற்பயிற்சியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது உடற்பயிற்சி குறித்துப் பதிவிட்டுள்ளார்.

அதில். ஒவ்வொருநாளும் ஹூட்டிங் முடிந்த மாலையில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஆர்வத்துடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருவதை வழகமாக வைத்திருக்கிறார். கடுமையாக உடற்பயிற்சி செய்துவிட்டுத்தான் அவர் வீட்டிற்குச் செல்கிறார். அவர் ஒவ்வொரு ஒர்க் அவுட் செய்ய  சுமார் 60 நிமிடங்கள் செலவழிக்கிறர் எனத் தெரிவித்து மகேஷ்பாபு உடற்பயிற்சி செய்யும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.