திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (19:02 IST)

’’சூரரைப் போற்று’’ பட 100 வது நாள்..... படத்தின் டெலிட் சீன்கள் ரிலீஸ் !

நடிகர் சூர்யா தயாரித்த நடித்திருந்த சூரரைப் போற்று. இப்படத்தை இறுதிச் சுற்று  படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கினார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட,மலையாளப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படம் ஆஸ்கர் நாமினேசனுக்கும் சென்ற பெருமை பெற்றது.

நீண்ட நாட்கள் கழித்து அவர் இந்த ஹிட் கொடுத்தாலும் பெரிய அளவில் அவரது நடிப்புக்காகப் பேசப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்று தணிக்கையின் போது நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது அமேசன் பிரைமில் வெளியாகியுள்ளது. இதனால், சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.