திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (11:13 IST)

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

Meenakshi
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மிகவும் விசேஷமாக நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கி உள்ளதை அடுத்து பக்தர்கள் பரவசம் ஆகியுள்ளனர்.

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கி உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீனாட்சி திருக்கல்யாணம், திருத்தேர், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்ச்சிகள் இந்த சித்திரை திருவிழாவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மே இரண்டாம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும் என்றும் மே ஐந்தாம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர்.

Edited by Siva