நாளை சித்திரை அமாவாசை.. முன்னோர்களை வணங்கினால் கோடி நன்மை..!
நாளை சித்திரை அமாவாசை வர இருப்பதை அடுத்து முன்னோர்களை வணங்கினால் கோடிக்கணக்கான நன்மை கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
சித்திரை மாதம் என்பது ஒரு ஆன்மீக சிறப்புமிக்க மாதம் என்பதும் குறிப்பாக சித்திரை அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது.
முன்னோர்களை வழிபட்டு எள் கலந்த சாதங்களை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதியளித்த பலன் உண்டாகும் என்றும் இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் கோடி நன்மை கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
சித்திரை மாத அமாவாசை தினத்தில் விரதம் இருந்தால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடையில்லாமல் நடக்கும், திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் என்று படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran