வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2020 (09:33 IST)

”மதுரை மீண்ட சுந்தரபாண்டியரே” – செல்லூராருக்கு செமையான வரவேற்பு!

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ட்ரெண்டாகி உள்ளன.

தமிழகம் முழுவதும் மக்களிடையே கோர தாண்டவமாடி வரும் கொரோனா அரசியல் பிரமுகர்களையும் தொடர்ந்து தாக்கி வருகிறது. அதிமுக அமைச்சர்களான கே.பி அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுக அமைச்சர்களில் மக்களிடையே அதிகமாக பேசப்படும் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக செல்லூர் ராஜூ இருக்கிறார். சமீபத்தில் மதுரை அருகே ரேசன் கடை ஒன்றில் ஊழல் நடந்ததை பைக்கில் சம்பவ இடத்திற்கே சென்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தது போன்ற செயல்கள் மக்களிடையே அவருக்கும் பெரும் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு கொரோனா நீங்கி நலம்பெற வேண்டும் என அவரது தொண்டர்கள் வேண்டி வந்தனர். இந்நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவரை வரவேற்கும் விதத்தில் மதுரை பகுதிகளில் “மதுரை மீண்ட சுந்தரபாண்டியரே” என அவரை வாழ்த்தி அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் ட்ரெண்டாகி உள்ளது.