திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (12:22 IST)

நாங்களும் பணிநீக்கம் செய்ய போறோம்! – HP நிறுவனம் ப்ளான்??

HP
பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களை தொடர்ந்து ஹெச்.பி நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பல தொழில்நுட்ப ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் ஆள்குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில் அதிலிருந்து பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.

ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கூகிள் நிறுவனம் ஆகியவை பணியாளர்களை நீக்கி வருவது தொழில்நுட்ப துறையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது ஹெச்.பி நிறுவனமும் இந்த ஆட்குறைக்கும் நிறுவனங்கள் பட்டியலில் இணைந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ஹெச்.பி தனது நிறுவனத்திலிருந்து 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஐடி துறையில் பணியாளர்கள் நீக்கப்பட்டு வருவது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாக மாறும் ஆபத்து உள்ளதாக அஞ்சப்படுகிறது.

Edited By Prasanth.K