1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (11:24 IST)

ஆவின் பாலில் ‘ஈ’: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

aavin
ஆவின் பாலில் ‘ஈ’: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
மதுரை ஆவின் பால் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட பாலில் ஈ இருந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மதுரையில் ஆவின் பால் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட பாக்கெட் ஒன்றில் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். மதுரை பல்கலைகழகத்திற்கு அருகேயுள்ள ஆவின் பால் டெப்போவில் அரை லிட்டர் பால் வாங்கிய பெண் ஒருவர் அந்த பாக்கெட்டில் ஈ மிதந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் 
 
உடனே அவர் அந்த பால் பாக்கெட்டை டெப்போவில் திருப்பி ஒப்படைத்த நிலையில் இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பால் பாக்கெட் குறித்த வீடியோ இருந்தால் வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தனர் 
 
மேலும் பேக்கிங் செய்யும் போது இவ்வாறு தவறு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது