1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (18:58 IST)

பதிவுத் துறை அதிகாரிகள் 80 பேர் சஸ்பெண்ட்: அமைச்சர் மூர்த்தி அதிரடி நடவடிக்கை!

murthy
பதிவுத் துறை அதிகாரிகள் 80 பேர் சஸ்பெண்ட்: அமைச்சர் மூர்த்தி அதிரடி நடவடிக்கை!
பதிவுத்துறையில் தவறு செய்த 80 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் சென்னை ராயப்பேட்டை பதிவு துறை அலுவலகத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார் 
 
இந்த ஆய்வின் போது தவறு செய்தவர்கள் 80 பேர்கள் வரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இடைத்தரகர் இல்லாமல் பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறான செய்தி பரப்புவது தவிர்த்துவிட்டு உண்மை செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்
 
இந்தியாவிலேயே முன்மாதிரியாக போலியாக பதிவு செய்தால் அந்த பதிவு ரத்து செய்யப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் மூர்த்தி எச்சரித்தார்