1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (12:23 IST)

Free Fire Game தடை செய்தும் விளையாடுகிறார்களா? – நீதிமன்றம் அதிர்ச்சி!

Free Fire
இந்தியாவில் ஃப்ரீ ஃபயர் உள்ளிட்ட கேம்கள் தடை செய்யப்பட்டும் சிறுவர்கள் விளையாடுவதாக வெளியாகியுள்ள புகார் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாடு முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் சிறுவர்கள், இளைஞர்களிடையே ஆன்லைன் கேம் மோகம் அதிகமாக உள்ளது. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் உள்ளிட்ட பல ஆன்லைன் கேம்களை விளையாடிய சிறுவர்கள் சில சமயம் மன அழுத்தத்தால் தற்கொலை, மூளையில் பாதிப்பு ஆகிய பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.


இதனால் சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த ஆன்லைன் கேம்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த கேம்கள் ப்ளே ஸ்டோர் உள்ளிட்டவற்றிலிருந்து நீக்கப்பட்டுவிட்ட போதிலும் வேறு சில தளங்கள் மூலமாக சிறுவர்கள் இதை தரவிறக்கி விளையாடுவதாக புகார் உள்ளது.
Madurai court

இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது இதுகுறித்து பேசிய நீதிபதிகள் “ஃப்ரீ ஃபயர் தடை செய்யப்பட்ட நிலையில் எப்படி அதை இளம் தலைமுறையினர் விளையாடுகிறார்கள்? காவல்துறை, சைபர் க்ரைம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஃப்ரீ பயர் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.