1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (22:23 IST)

மதுரை ஆதீனம் காலமானார் !

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 77 ஆகும்.


மதுரை ஆதீனம்(77) சுவாசக் கோளாறு காரணமாக மதுரையில் உள்ள பிரபல அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


அங்கு அவருக்கு  ஐசியுவின் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது.  இந்நிலையில்  இன்று அவர் உயிரிழந்தார்.

மதுரை ஆதீனமாக இருந்த போதிலும் அவர் அவ்வப்போது அரசியல் கருத்துகளையும் கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறப்பிற்கு அரசியல் தலைவர்கள், உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்  , ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.